அரசு பள்ளி மாணவர்களில் 96 சதம் பேர் உயர்கல்வியில் இணைந்து சாதனை

அரசு பள்ளி மாணவர்களில் 96 சதம் பேர் உயர்கல்வியில் இணைந்து சாதனை

அரசு பள்ளி மாணவர்களில் 96 சதம் பேர் உயர்கல்வியில் இணைந்து சாதனை

அலுவலர்களுக்கு ஈரோடு கலெக்டர் கந்தசாமி பாராட்டு


ஈரோடு, நவ. 5–


ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில், மாற்றுத்திறனாளி களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளான உதவித்தொகை, கலைஞரின் கனவு இல்லம், நத்தம் பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 232 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, கலெக்டர் அரசுப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த 96 சதவீத மாணவ மாணவியர்களை உயர்கல்விக்கு வழிகாட்டிய கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த மாவட்ட உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மாவட்ட உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி கள்ளிப்பட்டி அன்பரசு, விரிவுரையாளர் மாவட்ட அரசு தொழில்நுட்ப கல்லூரி சரவணன், மாவட்ட பல் தொழில்நுட்ப கல்லூரி ஸ்ரீனிவாசன், கணினி தரவு உள்ளீட்டாளர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மொடக்குறிச்சி சிவக்குமார், இளநிலை உதவியாளர் அரசு உயர்நிலைப்பள்ளி வாய்ப்பாடி சென்னிமலை சக்திவேல் ஆகியோரை பாராட்டி புத்தகம் வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%