அரபு நாடுகள் அவசர ஆலோசனை; இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு

அரபு நாடுகள் அவசர ஆலோசனை; இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு

தோஹா,


பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தொடுத்த போர் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.


இந்நிலையில், கடந்த வாரம் கத்தாரில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கத்தார் அழைப்பு விடுத்தது.


அதன்படி, நேற்று அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. இதில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, துருக்கி அதிபர் எர்டோகன், பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அதேபோல் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் முடிவு செய்துள்ளன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%