அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகம்

அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகம்



கரூர், நவ. 10–


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.


இது குறித்து கலெக்டர் தங்கவேல் தெரிவித்ததாவது:


“தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் இடம்பெற வேண்டும். இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரு இடங்களில் ஓட்டுரிமை பெற்றவர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே இப்பணியின் நோக்கம்,” என்றார்.


கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அரவக்குறிச்சி தொகுதியில் 253 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டிசம்பர் 4 வரை இப்பணியை மேற்கொள்ள உள்ளனர்.


எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து புதுப்பித்துக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான தங்கவேல் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது கிருஷ்ணராய புரம் வட்டாட்சியர் விஜயா, அரவக் குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%