 
    
கடவுச்சீட்டின் தற்போதைய நிலை காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார்.
2014 மக்களவைத் தேர்தலின்போது அமேதி மாவட்டத்தின் கெளரிகஞ்ச் மற்றும் முசாபிர்கானா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். இதன் காரணமாக எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்திற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது கடவுச்சீட்டின் தற்போதைய நிலை காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அதை புதுப்பிக்க அனுமதிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால்மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, கேஜரிவாலின் கடவுச்சீட்டைப் புதுப்பித்துக்கொள்ள நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. அதன்படி, அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக கோர்ட்டிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய நிலையில், அவருக்கு சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவரது வழக்குரைஞர் ருத்ர பிரதாப் சிங் மதன் தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
 
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 