அருள்மிகு கற்பக விநாயகர் மஹா கும்பாபிஷேக விழா....

அருள்மிகு கற்பக விநாயகர் மஹா கும்பாபிஷேக விழா....

 திருவண்ணாமலை நவம்பர் -3 நினைக்க முக்தி தரும் அக்னி ஸ்தலமான அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் மாட வீதியில் திருவூடல் தெருவில் கிரிவலப் பாதை துவங்கும் சந்திப்பில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் தங்கள் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறவும், கிரிவலம் எந்த ஒரு தடங்கலும் இன்றி நடைபெறவும், வேண்டி செல்கின்றார்கள். மேலும் உள்ளூர் பக்தர்கள் தினசரி கற்பக விநாயகர் வேண்டி செல்கின்றார்கள். வேண்டுவோருக்கு வேண்டும் வரும் அளிக்கும் சிறப்புமிக்க அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் புனராவர்த்தன, ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிவஸ்ரீ P.T. ரமேஷ் குருக்கள் அவர்கள், சிவஸ்ரீ L. சுந்தரமூர்த்தி குருக்கள், சிவஸ்ரீ P.T. வெங்கடேச குருக்கள், சிவஸ்ரீ P.T.R. கோகுல் குருக்கள், சிவஸ்ரீ L. ரவி குருக்கள், சிவஸ்ரீ L. சிவக்குமார் குருக்கள் அவர்களால் மங்கள இசை, வாஸ்து சாந்தி, கோ பூஜை, திருமுறை பாராயணம், கருவறையில் தீப ஸ்தாபனம், நான்காம் காலயாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், வேத மந்திர உபசாரம் பூர்ணாஹீதி, தீபாராதனை, கலசம் புறப்பாடு, ஐப்பசி மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம், காலை 10.10 மணிக்கு மூலவர் அருள்மிகு கற்பக விநாயகர் கும்பாபிஷேகம்,12. மணிக்கு மஹா அபிஷேகம் தீபாராதனையும் நடைபெற்றது ஏராளமானோர் பக்தர்கள் கற்பக விநாயகரை வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டது. வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%