அறிஞர் அண்ணா விருது வழங்கும் விழா

அறிஞர் அண்ணா விருது வழங்கும் விழா


சென்னை, இராணி மேரி கல்லூரி தமிழ்த்துறை, திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம், ஔவை அறக்கட்டளை, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை இணைந்து நடத்திய பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த நாள் பெருவிழா சென்னை இராணி மேரி கல்லூரியில் 15.09.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் நூல் வெளியீடு, பேசும் கலை வளர்க்கும் பயிலரங்கம், சிறந்த நாவன்மையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.


தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களின் "பேரறிஞர் அண்ணாவும் பிறநாட்டு அறிஞர்களும்" என்ற சொற்பொழிவு நூல் வெளியிடப்பட்டது.


தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி,   

சென்னை, மேனாள் மாநில தகவல் ஆணையர் முனைவர் சாரதாநம்பி ஆரூரன், மூத்த ஊடகவியலாளர், 'தமிழ் கேள்வி' தி.செந்தில் வேல், சென்னை, நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர், முனைவர் சொற்கோ இரா.கருணாநிதி, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம் பேரா. முனைவர் நா. சுலோசனா ஆகியோருக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள் அவர்கள் சிறந்த நாவன்மையருக்கான அறிஞர் அண்ணா விருது வழங்கிச் சிறப்பித்தார். 

ஔவைக் கோட்டம் தலைவர் முனைவர் மு.கலைவேந்தன், கவிஞர் சண் அருள்பிரகாசம் ஆகியோர் விழாவினை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

 இவ்விழாவில் கல்லூரி முதல்வர், தமிழ்த் துறைத் தலைவர், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%