புத்தகமாம் புத்தகம்
புத்தி புகட்டும் புத்தகம்!
புத்தகங்கள் படிப்பதால்
புரிய வேண்டும் வித்தகம்!
எத்தகைய தலைப்பிலும்
எடுத்து வைத்த நூலகம்!
எத்தனை நாள் கற்பதோ
என்ன என்ன புத்தகம்!
பத்து நூறு கருத்தினை
பதித்து வைத்த புத்தகம்!
அத்தனையும் படிப்பதால்
அறிவைகூட்டும் புத்தகம்!
முத்து போல பாடலும்
முழுக வைக்கும் கதைகளும்,
தத்துவங்கள் ஆயிரம்
தனக்குள் வைத்து தந்திடும்!
புத்தன் இயேசு காந்தியும்
புகுத்தும் நல்ல கருத்தினை
மெத்த மெத்த படிக்குமோர்
மேடை தானே நூலகம்!
அத்தனையும் படிக்கலாம்
அறிவுத்தேனை குடிக்கலாம்
அன்புத் தம்பி தங்கையே
அதனைப் படித்து துதிக்கலாம்!

வெ.தமிழழகன் எம்ஏ.பிஎட்
சேலம்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?