அலாரம் ஒலிக்கும் முன்பே
எச்சரிக்கையாய் எப்போதும் விழித்திருக்கும்
அவளின் மென்மையான மனம்
யதார்த்தம் நோக்கி நகரும்
அன்றைய பொழுதின் சூட்டில்
மெதுவாகக் கரையும் கனவுகள்.
வாசலில் போட்ட கோலத்தை
இணைக்கும் கோடுகளாய் வளைந்து,
நெளிந்து, விரிந்த வாழ்க்கை
அடுப்புத் தீயில் சூட்டிலும்
உறங்காத கண்களின் சோர்விலும்
எரியும் அவளின் தேவைகள்.
ஈரக் கூந்தல் நுனியிலும்,
புடவையின் கொசுவ மடிப்புகளிலும்
ஒளிந்திருக்கும் அவளின்
சொல்லாத ஆசைகள்.
வாசல் தாண்டி
வானத்தைப் பார்த்து
தன்னை உணரும் தருணமே
தொடங்கும் அவளுக்கான விடியல்.
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%