ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு



ஆட்டோவில் பயணித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு | கோப்புப்படம்

அமராவதி: ஒவ்​வொரு ஆண்​டும் ஆட்டோ ஓட்​டுநர்​களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்​கப்​படும் என்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு அறி​வித்​துள்​ளார்.


ஆந்​திர மாநில மழைக்​கால சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் தற்​போது அமராவ​தி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது:


தேர்​தல் வாக்​குறு​தி​களை கூட்​டணி அரசு வெற்​றிகர​மாக செயல்​படுத்தி வரு​கிறது. சூப்​பர் சிக்ஸ் திட்​டம் ஆந்​தி​ரா​வில் சூப்​பர் வெற்​றி. ஒவ்​வொரு மாத​மும் முதல் தேதி அன்று மாத உதவி தொகைகளை நேரில் சென்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்கு வழங்​கு​வ​தில் எனக்கு முழு திருப்​தி​யாக உள்​ளது.


தெலுங்கு தேசம்​-​பாஜக-ஜன​சேனா கூட்​டணியை உறுதி செய்தோம். மக்​கள் முழு வெற்​றியை அளித்​தனர். அவர்​களுக்கு நன்றி கடன் செலுத்​து​வது போல் தேர்​தல் வாக்​குறு​தி​கள் அனைத்​தை​யும் நிறைவேற்றி வரு​கிறோம். தேர்​தல் அறிக்​கை​யில் வெளி​யிடப்​ப​டாத மேலும் பல வாக்​குறு​தி​களை​யும் நிறைவேற்றி வரு​கிறோம். விரை​வில் ஆட்டோ ஓட்​டுநர்​கள் மற்​றும் கேப் ஓட்​டுநர்​களுக்கு ஆண்​டுக்கு ஒரு​முறை ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்​கப்​படும். இதற்கு ஆட்டோ ஓட்​டுநர்​களின் சேவை என்று பெயர் சூட்​டப்​பட்​டுள்​ளது.


இதன்​மூலம் ஆந்​தி​ரா​வில் 2,90,234 பேர் பயனடைவர். இதற்​காக ரூ.435 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்கு முந்​தைய ஆட்சி ஆட்டோ ஓட்​டுநர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.12 ஆயிரம் மட்​டுமே வழங்​கியது. எனது தலை​மையி​லான அரசு ஆண்​டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கு​கிறது. இவ்​வாறு முதல்​வர் சந்​திர​பாபு நா​யுடு பேசி​னார்​.

------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%