ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சாரம்: ராணிப்பேட்டை கலெக்டர் துவக்கி வைத்தார்

ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சாரம்: ராணிப்பேட்டை கலெக்டர் துவக்கி வைத்தார்



ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார்.


ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார சிறப்பு முகாம் 21–ந் தேதி முதல் 4.12.2025 வரை ஒருங்கிணைந்த வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ரூ.1100 வழங்கப்படும். பயனாளர்களை அழைத்து வரும் ஊக்கு விப்பாளர்களுக்கு ரூ.200 வழங்கப்படுகிறது.


வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வேலூர் / இராணிப்பேட்டை / திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.


இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்கள் மரு.தீர்த்தலிங்கம் (ஊரக நலப் பணிகள்), மரு.மணிமேகலை (குடும்ப நலம்), துணை இயக்குநர்கள் மரு.செந்தில்குமார் (பொது சுகாதாரம்), மரு.ஜெயஸ்ரீ (காசநோய்), இரத்தவங்கி மருத்துவஅலுவலர் மரு.சந்தியா வதனா, மண்டல திட்ட மேலாளர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு கிருத்திகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%