ஆதிரையான் ஆட்டம்

ஆதிரையான் ஆட்டம்

🔥🔥


ஓங்கார மண்டலத்தின் இடையே,

செஞ்சடை விரிந்தாட;

கங்கை புனல் வழிந்தோட;

தோடுடை செவியன்

குண்டலங்கள் குதித்தாட;

மானோடு மழுவாட

நாகம் படமெடுத்தாட;  

டமருகம் ஜதிபோட;

பொன் கொன்றை மாலை அசைந்தாட;

வீசிய கரங்கள் 

திசையெங்கும் தொட்டாட;

மகாரத்தில் ஊன்றிய பாதம்  

கருத்தில் நிற்க;

தூக்கிய குஞ்சித பாத தண்டையாட, 

மருண்ட முயலகன் கண்கள் வெருண்டோட;

விண்டறிய விண்ணவர் கோமான்;

தண் நிழல் மனம் புகுந்தது இன்று.


சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%