ஆத்தூர் கூட்டுறவு கலை – அறிவியல் கல்லூரியில் பயிலும் 1600 மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தை செலுத்தினார்: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பெற்றோர்கள் நன்றி

ஆத்தூர் கூட்டுறவு கலை – அறிவியல் கல்லூரியில் பயிலும் 1600 மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தை செலுத்தினார்: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பெற்றோர்கள் நன்றி

சின்னாளபட்டி, ஜூலை.23–


ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவியர் அனைவருக்கும் சொந்தசெலவில் கல்லூரி கட்டணம் செலுத்தும் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர் 2025-–26ம் ஆண்டு பயிலும் 1600 மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தை செலுத்தி வருவதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த போது அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலன் கருதி எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக கிராம புறங்களில் உள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்தி மேல்நிலை பள்ளிகளாக கொண்டு வந்தார். இதன் மூலம் பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்களின் தரம் உயர்ந்தது.


அதன்பின்னர் ஆத்தூர் தொகுதியில் வசிக்கும் மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்பதற்காக திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி செல்வதை அறிந்த கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அவர்கள் தமிழகத்தில் முதன்முறையாக கூட்டுறவு துறை சார்பாக கூட்டுறவு துறை கலை மற்றும அறிவியல் கல்லூரியை சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட சுதனாகியபுரத்தில் ரூ.80 கோடி மதிப்பில் கொண்டு வந்தார். கல்லூரி தொடங்கப்பட்ட போது பி.ஏ.வரலாறு, கூட்டுறவு, பொருளியல், தமிழ், வணிகவியல், கணினியியல் (பி.காம்.சிஏ), வணிக மேலாண்மை படிப்புகள் தொடங்கப்பட்டன.


தற்போது கல்லூரியில் 2025–-26ம் கல்வி ஆண்டில் 1600 மாணவர்கள் படித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு திங்கள்கிழமை 2025-26ம் கல்வி ஆண்டு முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கவிழாவிற்கு வருகை தந்த அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் கரங்களை பற்றி மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் மனதார பாராட்டும் கண்ணீர் மல்க நன்றியும் தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் ஒரு குடும்பத்திற்கு கல்வியும் வேலைவாய்ப்பையும் வழங்கினால் அந்த குடும்பம் எந்த சிரமமும் இன்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும். இதை உணர்ந்து தான் ஆத்தூர் தொகுதியில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 300 பேருக்கு மேல் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இது போல் இங்கு பயில வரும் மாணவர்களின் குடும்ப சூழ்நிலைகளை உணர்ந்து கல்விகட்டணமும், பருவ கல்வி கட்டணமும் செலுத்தி வருகிறேன். இது எனது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து வருகிறது. தொடர்ந்து இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணம் செலுத்துவேன் என்பதை உறுதிபட சொல்வேன் என்றார். ஒரு சில மாணவர்களின் பெற்றோர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி தடுத்தும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று நீங்களே எங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குங்கள் எனக்கூறி அமைச்சர் அவர்களின் கரத்தை பிடித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது மனதை நெகிழ வைத்தது. கல்வி கண் திறந்த காமராஜர் போல் ஆத்தூர் தொகுதியில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தியதோடு அவர்கள் சிரமமின்றி பயில அரசு கல்லூரியை கொண்டுவந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சமூக ஆர்வலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மனதார பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%