ஆன்லைன் மூலம் வாக்காளர் பெயர் சேர்க்க அல்லது நீக்க ஆதார் லிங்க் போன் கட்டாயம்: தேர்தல் ஆணையம்

ஆன்லைன் மூலம் வாக்காளர் பெயர் சேர்க்க அல்லது நீக்க ஆதார் லிங்க் போன் கட்டாயம்: தேர்தல் ஆணையம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்து தொகுதியில், 6018 வாக்காளர்கள் பெயரை போலியாக விண்ணப்பம் செய்து, நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என ராகுல் காந்தி அதற்கான ஆதாரங்களுடன் வெளியிட்டார். ஆனால், தேர்தல் ஆணையம் அவரது குற்றச்சாட்டை மறுத்து வந்தது.


வாக்காளர் பட்டியலில் மாற்றத்திற்கான விண்ணப்பம் சரிபார்த்ததில் 24 விண்ணப்பம்தான் உண்மையானது எனத் தெரியவந்தது.


பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி திட்டவட்டாக தெரிவித்து வருகிறார். அத்துடன் முறையாக இந்த திருட்டு நடந்துள்ளது எனத் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க வேண்டுமென்றால் ஆதார் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பர் தேவை என்ற முறையை தேர்தல் ஆணையம் நடைமுறைப் படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தேர்தல் ஆணையத்தின் ஐ.டி. துறை இதற்கான பணிகளை செய்து வந்த நிலையில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக, EVMs மெஷினில் வேட்பாளர் போட்டோ கலரில் பொறிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%