ஆபரேஷன் சிந்தூர்’ நமது ராணுவ திறனை உலகிற்கு எடுத்துக்காட்டியது - முன்னாள் ராணுவ தளபதி நரவனே

ஆபரேஷன் சிந்தூர்’ நமது ராணுவ திறனை உலகிற்கு எடுத்துக்காட்டியது - முன்னாள் ராணுவ தளபதி நரவனே


‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு மிகப்பெரிய திருப்புமுனை நடவடிக்கையாக மாறியுள்ளது என மனோஜ் நரவனே தெரிவித்துள்ளார்.

மும்பை,


மும்பையில் நடைபெற்ற உலகளாவிய தலைமைத்துவ உச்சி மாநாடு 2025-ல் இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி மனோஜ் நரவனே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-


“பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் இடையில் வேறுபாடு காட்ட மாட்டோம் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. நமது நாட்டின் கொள்கையைப் பொறுத்தவரை, ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு மிகப்பெரிய திருப்புமுனை நடவடிக்கையாக மாறியுள்ளது.


நமக்குத் தேவையான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நமக்கு அரசியல் விருப்பம் மட்டுமின்றி, ராணுவ திறனும் உள்ளது என்பதை ‘ஆபரேஷன் சிந்தூர்’ உலகிற்கு எடுத்துக்காட்டியது. ‘நீங்கள் அமைதியை விரும்பினால், போருக்குத் தயாராகுங்கள்’ என்று ரோமானிய ஜெனரல் வெஜிடியஸின் கூற்று, எனக்கு மிகவும் பிடித்த மேற்கோள்களில் ஒன்றாகும்.”


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%