ஆர். வைஷாலி, கே.சுமித்ரா,எஸ். சத்யா பி. சித்ரேஷுக்கு அரசு, பொதுத்துறையில் பணி நியமன ஆணை : ஸ்டாலின் வழங்கினார்
Sep 23 2025
94
சென்னை, செப் 22–
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச அளவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முதலமைச்சர் இன்றையதினம், சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2வது இடம் பெற்ற சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆர். வைஷாலிக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் இளநிலை அலுவலர் (தரம் III) பணியிடத்திற்கும், நேபாள நாட்டின் போக்ராவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதல் இடம் பெற்ற கால்பந்து வீராங்கனை கே. சுமித்ராவுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் கணக்காளர் பணியிடத்திற்கும்,
நேபாள நாட்டின் போக்ராவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதல் இடம் பெற்ற கூடைப்பந்து வீராங்கனை எஸ். சத்யாவுக்கு தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தில் மார்க்கெட்டிங் நிர்வாகி பணியிடத்திற்கும், சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாய்மர படகு போட்டி வீரர் பி. சித்ரேஷ் தத்தாவுக்கு சிப்காட் நிறுவனத்தில் உதவி அலுவலர் பணியிடத்திற்கும், என 4 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வர்த்தகத் துறைசெயலாளர் அருண் ராய், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?