ஆலமரம்

ஆலமரம்


பாட்டன் முப்பாட்டன் என்னப்பன்.. என்பிள்ளையினை

பரவசமாய் வரவேற்ற அந்தமரம்.!


கூட்டுக் குடும்பமாய்..

 கூடிநின்று குழந்தைகளும்..

ஆட்டம்மாடி ஓய்வெடுக்க மடிகொடுத்த அந்தமரம்!


பாட்டுக் குயில்களும் பச்சைக் கிளிகளும் காக்கைகளும் வந்தமர்ந்து.. கானம் இசைக்குமிடம் அந்தமரம்!


கூட்டாய் ஒன்றுகூட.. குறைநிறை கலந்துபேச

கிராமப் பஞ்சாயத்தின்

அதிகாரத் தளம்அந்த ஆலமரம்.!


வயதான காலத்திலே

வளர்த்து விட்டப்

பிள்ளைகளை தாங்கும் விழுதாக்க வேண்டும் என்றே அழைக்கிறது அந்தமரம்!


தாயாய் தந்தையாய்

தனைத்தந்து ஊர்நடுவே புயல்மழை கடந்துநின்று புன்னகைக்கிறது பார் அந்தமரம்!


சாயும் நிலையினிலே

சற்றும் தளராது

தாங்குகின்ற விழுதுகளால் தலைநிமிர்ந்து நிற்கிறது அந்தமரம்!


நீயும் நானும் இங்கு

பிறந்தவர்கள் மறைந்தாலும்.. ஓயாது உயர்ந்துஅடர்ந்து நிழல்தந்து பயன்மரமாய் நின்றதடா ஆலமரம்.!


வே.கல்யாண்குமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%