ஆஷஸ் - சிட்னி டெஸ்ட்ஹெட், ஸ்மித் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.,

ஆஷஸ் - சிட்னி டெஸ்ட்ஹெட், ஸ்மித் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.,



ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதா னத்தில் ஞாயிறன்று ஆஷஸ் தொடரின் ஐந்தா வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டிதொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. ஜோ ரூட்டின் (160 ரன்கள்) அபார சதத்தின் உதவியால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 97.3 ஓவர்களில் 384 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிக்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 34.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து இருந்தது. டிராவிஸ் ஹெட் (91 ரன்கள்), நேசர் (1 ரன்) களத்தில் உள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று தொடர்ந்து 3ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஹெட் (12ஆவது) சதமடித்தார். அவர் 166 பந்து களில் 163 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே போல கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 37ஆவது டெஸ்ட் சதத்தை விளாசி னார். லபுஸ்சாக்னே (48 ரன்கள்), கிரீன் (37 ரன்கள்) ஓரளவு கைகொடுக்க, மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்தி ரேலிய அணி 124 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது. ஸ்மித் (129 ரன்கள்), வெப்ஸ்டர் (42 ரன்கள்) ஆகியோர் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தை விட ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், புதனன்று 4ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%