மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 5-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தையும், 4-ம் நிலை வீரரும், 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 141-ம் நிலை வீரரான இத்தாலியின் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லியையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச்சின் 399-வது வெற்றியாக இது அமைந்தது. 400 வெற்றிகள் என்ற மைல்கல் சாதனையை படைக்க அவருக்கு மேற்கொண்டு ஒரு வெற்றி மட்டுமே தேவையாக உள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?