பி.வி.சிந்துவுக்கு 500-வது வெற்றி!

பி.வி.சிந்துவுக்கு 500-வது வெற்றி!



ஜகார்த்தா: இந்​தோ​னேஷியா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் இந்​தோ​னேஷி​யா​வில் உள்ள ஜகார்த்தா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் பி.​வி.சிந்து 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்​கில் டென்​மார்க்​கின் லின் ஹோஜ்​மார்க் கஜேர்ஃபெல்ட்டை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். சர்​வ​தேச பாட்​மிண்​டன் போட்​டிகளில் பி.வி.சிந்துவின் 500-வது வெற்​றி​யாக இது அமைந்​தது.


ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் லக்சயா சென் 21-10, 21-11 என்ற செட் கணக்​கில் ஹாங் காங்​கின் ஜேசன் குணவனை தோற்​கடித்து கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார். மற்​றொரு இந்​திய வீர​ரான கிடாம்பி காந்த் 11-21, 10-21 என்ற நேர் செட் கணக்​கில் 4-ம் நிலை வீர​ரான சீன தைபே​வின் சோ டியன் சென்​னிடம் தோல்வி அடைந்​தார்​.



ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக்

 

மெல்போர்ன்,


கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.


பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) மேரி பவுஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.


பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 24-வது முறையாக 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%