" நம் இந்து சமய
கோவில் கோபுரங்கள்
ஆயிரம் ஆயிரம்
ரகசியம் சொல்கிறது .... "
கோபுர கலசங்கள்
விழிப்புணர்வை
மனதில் ஏற்படுத்தி
விடுகிறது ....."
ஆலய விக்ரகங்கள்
புனிதம் தூய்மை
நேர்மை அக
பிரகாசம் ஏற்படச்
செய்கிறது .... "
ஆலய பிரகாரங்கள்
மனத் தெளிவை
உடல் ஆரோக்கியத்தை
தூண்டுகிறது ...."
ஆலயத் திருக்குளங்கள்
தேக சுத்தத்திற்கும்
குளுமைக்கும்
மழைநீர் சேகரிப்பிற்கும்
சான்றாக இருக்கிறது ..."
கோபுர வாசல்
தூய்மையான காற்றை
சுவாசிக்க
துணை செய்கிறது ....."
பிரசாதம் வயிற்றுக்கும்
சிறிது ஈய்யப்பட்டு
மனநிறைவை
தருகிறது ..."
மொத்தத்தில் ஆலயம்
அன்பு பாசம்
பிரார்த்தனை
மனிதம் பெருகும்
இடமாக ஜொலிக்கிறது ....."
கோவில் இல்லா
ஊர் பாழ்
என்பது ஒளவையின்
வாக்கு ...."
- சீர்காழி .ஆர். சீதாராமன் .
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?