
சென்னை, செப். 17–
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மூச்சுத் திணறலால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1980ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர் சங்கர் கணேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் சங்கர் கணேஷ். சங்கர் கணேஷ் சென்னையில் வசித்து வருகிறார்.
இசை நிகழ்ச்சி உள்பட பிற நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
சங்கர் கணேஷுக்கு இன்று திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரூரில் இன்று மாலையில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பாடுவதற்காக சங்கர் கணேஷ் சென்னையில் இருந்து காரில் புறப்பட இருந்ததாகவும், அந்த சமயத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?