இண்டிகோ விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக சென்னையில் தரையிறக்கம்; 2 இளைஞர்கள் கைது
Sep 21 2025
41

சென்னை, செப். 20–
மும்பையிலிருந்து தாய்லாந்து சென்ற இண்டிகோ விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையொட்டி 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வெடிகுண்டு புரளி விடுத்தது பற்றி அவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகர் நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று மாலை புறப்பட்டு சென்றது. 176 பயணிகள், 6 ஊழியர்கள் என 182 பேருடன் சென்னை வான் எல்லைப்பகுதியில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தது.
அப்போது மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர், அந்த விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளன. விமானம் நடுவானில் வெடித்து விடும் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
இந்த மிரட்டலை தொடர்ந்து, அந்த விமானம் உடனடியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டு, இரவு 7.20 மணியளவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது. 8 மணிநேரம் தாமதத்திற்கு பின்னர் பயணிகளை ஏற்றி கொண்டு அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?