இண்டியா கூட்டணியில் இருந்து விலகுகிறதா ஜேஎம்எம்? - பிஹார் முடிவுகளுக்காக காத்திருக்கும் ஹேமந்த் சோரண்!
ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரண் | கோப்புப் படம்
புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாகவும், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் அக்கட்சி சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சி உள்ளது. இக்கட்சி தலைமையிலான கூட்டணி ஜார்க்கண்ட்டில் ஆட்சியில் உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரண் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
பழங்குடி மக்களின் கட்சியாகக் கருதப்படும் ஜேஎம்எம்-க்கு பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் கனிசமான வாக்கு வங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
எனினும், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இரண்டு எஸ்டி தனித் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த ஜேஎம்எம், ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. அதன் பிறகும் இண்டியா கூட்டணி ஜேஎம்எம்-ஐ பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, போட்டியில் இருந்து விலகும் முடிவை ஜேஎம்எம் எடுத்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கும் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரண், பிஹார் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருப்பதாக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின், இண்டியா கூட்டணியிலிருந்து ஜேஎம்எம் விலகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?