இதய கதவை திறந்து வை

இதய கதவை திறந்து வை


--------------------------------


இதய பூட்டை வருமை சாவி வலியால் திறக்கும்

இதய பூட்டை அவமான சாவி சொற்கனையால் திறக்கும்...!


இதய பூட்டை இனிமை காதல் திறக்கும்

இதய காதல் கடைசிவரை நம்மோடு இருக்கும்...!


வறுமையிலும், நேர்மை இந்த இதயத்தில் இருக்கும்

பகிர்ந்து கொடுக்கும் பக்குவம் இந்த இதயத்தில் என்றும் இருக்கும்...!


ஏழைகளின் இதயத்தை இரக்கம் என்ற சாவி திறக்கும்

வசதி உள்ளவன் இதயத்தை வஞ்சகன் என்ற சாவி திறக்கும்...!


இறைவனின் படைப்பு அனைவருக்கும் இதயம் ஒன்றே...

அதை புனிதமும், புரிதலும் நிறைந்திருந்தால் நன்றே...!!


பொன். கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%