பெண்பார்க்கும் படலம் முடிந்தது. துர்காவை பையனுக்கு வெகுவாகப் பிடித்துவிட்டது. அவனுடைய பெற் றோரையும் நன்கு இமப்ரெஸ் செய் தாள் துர்கா.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்து நல்ல முடிவுக்கு வந்நது.
மாப்பிள்ளை மோகன் எம்.பி.ஏ. பட் டதாரி.ஒரு ஐ.டி.கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்கும் நல்ல உத்தியோகம். நங்க நல்லூரில் சொந்தவீடு.
மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டுச் சென்றனர். " அம்மா துர்கா.!" கணேசன் அழைக்க எதிரில் வந்து நின்றாள்..அம்மா கனகவல்லியும் மகள் பக்கத்தில் நின்றாள்.
" அம்மாடி ! உனக்கு மாப்பிள்ளைப் பையனை பிடிச்சிருக்கா. மேற் கொண்டு நான் காரியத்தில் இறங் கவா ?"
" அடாடா ! அதான் பையன் இருக்கற
போதே சம்மதம் சொன்னாளே. மறுபடியும் என்ன சந்தேகம் ?" கனக வல்லி சொன்னாள்.
" இரும்மா ! அப்பா கேட்கறதுல தப்பே யில்ல. ஒண்ணுக்கு ரெண்டு தடவை யா கேட்டு கன்ஃபர்ம் பண்றார்.." என்றவள், " அப்பா ! ஓ.கே ப்பா ! நீங்க தாராளமா மேற்கொண்டு இறங்க லாம்." என்றாள் துர்கா புன்னகை யுடன்.
பெண்ணுக்கு 30 சவரன் நகை, சீர் வரி
சைப் பாத்திரங்கள் , கட்டில் , பீரோ, மாப்பிள்ளைக்கு வரதட்சணை 30,000 ரூபாய் புடவை, வேஷ்டி.. மற்றும் கல்யாணச் செலவு இவை எல்லாவ ற்றுக்கும் சம்மதம் தெரிவித்திருந்தார் கணேசன் பிள்ளையின் தகப்பனா ரிடம்.
ஒருவழியாக மகளின் திருமணம் முடிவானது கணேசனுக்கு மகிழ்ச்சி யைத் தந்தது.ஆனாலும் கல்யாணச் செலவுகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் துண்டு விழுந்ததுஅந்தப் பணம் தம்பி தருவதாக வாக்களித்
திருந்தான். கல்யாணம் பண்ணிக்கா
மலே கிராமத்தில் செட்டிலாகி யிருந்தான் கணேசனின் தம்பி. துர்காவின் கல்யாணச்செலவுகளில் தானும் பங்களிப்பதாக கூறியிரு ந்தான்.
நிச்சயத்தார்த்தம் தேதி குறிக்கப்ப ட்டது. இதை நேரில் சொல்ல கணேச னும் கனகவல்லியும் நங்கநல்லூரு க்குக் கிளம்பினர்.
இவர்களைப் பார்த்ததும் வாசலில் வந்து வரவேற்றனர் மோகனின் பெற்றோர். " வாங்க. "
உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்
தார் கணேசன். கனகவல்லி மோகன்
அம்மாவுடன் அடுக்களைக்குள் சென்
றாள்.
" ஒரு நல்ல சமாசாரம் " எனஆரம்பித்த
கணேசன் , " மாசக்கடைசி வெள்ளி க்கிழமை நாள் நல்லா இருக்கு. அன்னிக்கு எங்கேஜ்மண்ட் வச்சிக்க லாம்னு முடிவு பண்ணியிரூக்கு. உங்களுக்கு.செளகர்யம்தானே ?" என்றார்.
தலைகவிழ்ந்தவாறு யோசனை செய்தவர் கொஞ்சநேரம் கழித்து நிமிர்ந்தார்.
" ஓ.கே. சம்பந்தி.....அப்புறம்...மெல்ல இழுத்தவர் , " டெர்ம்ஸுல ஓரு சின்ன திருத்தம் ! "
கணேசனுக்கு பகீரென்றது. பிடரியில்
வேர்த்தது. மனுஷன் என்ன கேட்கப் போகிறாரோ என்ற கிலியும் ஏற்பட் டது ! மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தார்.
" அன்னிக்கே கேட்டிருக்கணும். தப்புதான்ஆனாலும் லேட் ஒண்ணும் ஆகல்லியே. அதாவது சம்பந்தி ! மாப்பிள்ளைக்கு ஒருஅஞ்சு பவுன்ல மைனர் செயின் வாங்கிப்போட்டு டுங்க. கல்யாண் அன்னிக்கு
பையன் வெறுங்கழுத்தோட இருக்கறது நல்லா இருக்காதில் லையா...."
கணேசன் முகம் இறுகிப்போயி ருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு சந்தோஷமாக வந்தாரோ அவ்வள வுக்கவ்வளவு மனசு நொந்துபோ யிருந்தார்.
" சம்மந்தி ! நிச்சயத்தார்த்தத்துக்கு நாள் குறித்த சேதியை சொல்ல லாம்னு வந்தேன். நீங்க அடிஷனலா ஒரு கோரிக்கையை வச்சுட்டீங்க. இது என் சக்திக்கு மீறின செயல் ! இருந் தாலும் நான் வீட்டுக்குப் போய் கலந்தாலோசித்துவிட்டுநான் தகவல் சொல்றேன் " என்று எழுந்து கொண்டார் கணேசன்.
" சம்பந்தி ! ஒண்ணும் நினைச்சிக்காதீ
ங்க ! நீங்க வாங்கற செயின போட்டு க்கிட்டுதான் என் பையன் எங்கேஜ் மண்ட் அன்னிக்கு மணையில உட்கா ருவான். "
தீர்த்துச் சொல்லிவரைப் பார்த்து "வரேன்." எனக் கூறிவிட்டு மனை வியுடன் புறப்பட் டார் கணேசன்.
" இதென்னங்க அநியாயமா இருக்கு !
சொல்றது ஒண்ணு செய்றதுஒண்ணு
ம்னு இருக்காங்க. அந்த அம்மாவுக்கு
சம்பந்தியோட பேச்சு பிடிக்கல்ல. என்
கிட்டச் சொல்லி வருத்தப்பட்டாங்க.
அவர் உங்கக்கிட்ட செயின் கேட்கப் போகிற விஷயம்கூட அந்தம்மா வுக்குத் தெரியாதாம் !"
" ம்..என்ன செய்றது ! அஞ்சு வரலும் ஒண்ணாயிருக்கா...மனுஷன்.ஃபோன்ல இதைச் சொல்லியிருக்கலாம். மெனக் கெட்டு நாம சிந்தாதி ரிப்பேட்டையிலிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கவேண்டி அவசியம் இருந்திருக்காது.
வீட்டுக்குச் சென்றதும் துர்கா ஆர்வமுடன் ஓடி வந்தாள். அவளிடம் விஷயத்தை அம்மா கனகவல்லி கூற கோபமுற்றாள் துர்கா. " சே ! கொஞ் சம் கூட இரக்கமில்லாதவங்க. அவங்களுக்கு பெண் இல்ல.
இருந்திருந்தால் கஷ்டம் தெரிந்திருக்
கும் " ஆத்திரத்தில் உதடுகள் துடித் தன !
" துர்கா ! கொஞ்சம் அமைதியா இரும்மா. அவங்க கேட்கதான் செய்வாங்க.இதுக்கெல்லாம் ஆத்திரப்படக் கூடாது " மகளை அமைதிப் படுத்தினார் கணேசன்
அன்று பூராகவும் ஒறு இறுக்கமான சூழல் அந்த வீட்டைப் பற்றிக்கொ ண்டது.
மறுநாள் காலை மோகன் லேண்ட்லை
னில் அழைத்தான். கணேசன்தான் எடுத்தார். " தம்பி ! நமஸ்காரம் ! " என்றார்.
" அங்கிள் ! நமஸ்காரம். நேத்து எங்கேஜ்மண்ட் விஷயமா நீங்களூம் ஆண்டியும் எங்க வீட்டுக்கு வந்ததா எங்க அம்மா சொன்னாங்க. அஞ்சு பவுன் செயின் போடணும்னு எங்க அப்பா உங்கக்கிட்ட கேட்டாராம். ஸாரி அங்கிள். அது தப்பு. ஏன்னா பேச்சு வார்த்தை முடிஞ்சுப் போச்சு ! அப்பவே கேட்டிருக்கணும். இப்போகேட்கறதில நியாயமே இல்ல.
" சரி. நான் விஷயத்துக்கு வரேன். அங்கிள் ! எங்கப்பா பிடிவாதக்காரர். அதேசமயம் உங்கப் பெண்ணோட கல்யாணமும் திட்டமிட்டபடி நடந்தாக ணும். அதனால நான் என் செலவுல அஞ்சு பவுன் செயின் வாங்கிக் கொடுத்துடறேன். நீங்க வாங்கிப் போட்டதா இருக்கட்டும். என்ன சொல்றீங்க ?"
" நீங்க எதுக்குத் தம்பி எங்களூக்காக கஷ்டப்படணும் ?"
" அங்கிள் ! நீங்களா எங்களூக்காக கஷ்டப்படும்போது உங்களூக்காக நான் கஷ்டப்படக்கூடாதா.?"
" ரொம்ப சந்தோஷம் தம்பி ! நான் வீட்டில கலந்தாலோசித்துவிட்டு உங்களைக் காண்டக்ட் பண்ணறன் ." ரிஸீவரை வைத்தார்.
முகம் கொள்ளா சிரிப்புடன் விஷ யத்தை இருவரிடமும் சொன்னார்.
" பரவாயில்லை அம்மாவும் பிள்ளை யும் நல்லவர்களாக இருக்கி றார்கள் " என்றாள் கனகவல்லி.
ஆனால் துர்கா முகத்தில் சிரிப்பு இல்லை" அப்பா ! மாப்பிள்ளை அவரோட அப்பாக்கிட்ட பேசியிரு க்கலாம். அப்படிப் பேசிதன் வழிக்குக் கொண்டுவந்திருக்கணும்.அப்படிக் கொண்டுவரத் திராணியில்ல.
அப்பாவுக்குத் தெரியாமல் செயின் வாங்கித்தறாராம். அதை நாம வாங்கி க்கணுமாம் !
" சரி. வாங்கி கல்யாணமும் முடிஞ்சுப்
போச்சுன்னு வச்சிப்போம். தீபாவளி க்கு வைரமோதிரம் வாங்கிப் போடு ங்க அப்புறம் பொங்கலுக்கு பைக் வாங்கிக் கொடுங்கன்னு அவரோட அப்பா கேட்டால் உங்களால வாங்க முடியுமா...முடியாத பட்சத்தில் மாப்பி ள்ளை சார் ஹெல்ப் பண்ணுவாரா ?
" ஸாரிப்பா ! முதுகெலும்பு இல்லாத மனுஷனக் கட்டிக்க நான் விரும் பல்லே " தீர்த்துச் சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்தாள் துர்கா.
கணேசனும் கனகவல்லியும் யோசிக்க ஆரம்பித்தனர்.
வி.கே.லக்ஷ்மிநாராயணன்