
அலையின் கரங்கள் அறைகின்ற போதும்
அசைவின்றி நிற்கும் கற்பாறையைப் போல்
சிலையின் மீது சிற்றுளி தாக்கியும்
சீர்குலையாத
சிறுபுன் னகை போல்
கட்டமைத்திட்ட காவிரி நதியால்
கலை நயம் மிளிரும் கூழாங்கல் போல்
சோதனைப் புயலில் சிக்குண்ட போதும்
சாதனை புரியும்
நெஞ்சுரம் வேண்டும்.
நடப்பவை எல்லாம் நல்லதற் கென்றே
திடங்கொள் மனதின்
திட்பம் வேண்டும்.
தீர்வு நிச்சயம் திரளுமென்ற
நேர்மறைச் சிந்தனை நிறைந்திட வேண்டும்.
பரிதி மறைவின் அந்தி வானம்
குருதி வண்ணக் கோலம் காட்டும்.
குளிர் நிலவொளியில் அதே வானம்
வெளிர்நிறம் கொண்டு விந்தை காட்டும்.
இதுவும் நாளை மாறும் என்ற
புதுநம் பிக்கை பூத்திட வேண்டும்.
வாழ்வது ஒருமுறை என்பதனாலே
ஊழ்வினை தீவினை உதறித் தள்ளி
வாழ்ந்து பார்ப்போம் ஒவ்வொரு நாளும்.
ஆழ்ந்து ரசிப்போம் அழகிய வாழ்வை.
*P.. கணபதி*
*பாளையங்கோட்டை*
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?