இந்திய அஞ்சல் துறை ரூ.17,546 கோடி ஈட்ட இலக்கு: மத்திய அமைச்சர் தகவல்
புதுடெல்லி: அஞ்சல் துறையின் மூன்றாம் காலாண்டு செயல்பாடுகள் குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: ”ஆறு பிரிவுகளில் ஐந்து பிரிவுகள் வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அமெரிக்க அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச அஞ்சல் பிரிவு எந்த மாற்றமும் இல்லாமல் வளர்ச்சி நிலையான அளவில் உள்ளது.
நடப்பு 2025- 26ம் நிதியாண்டில் அஞ்சல் துறையின் வருவாய் இலக்கு ரூ.17,546 கோடியாகும். இது முந்தைய நிதியாண்டை விட 30 சதவீதம் அதிகமாகும்.
2023- 24ம் நிதியாண்டில் அஞ்சல் துறையின் வருவாய் ரூ.12,800 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த நிலையில், கடந்த நிதியாண்டு வருவாயுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் சுமார் 10 மடங்கு அதாவது 30 சதவீத வருவாய் அதிகரிப்புக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?