இந்திய அரசியலமைப்பு நாள் விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள்
Nov 26 2025
43
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மும்முனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று இந்திய அரசியலமைப்பு நாளையொட்டி மாணவர்களுக்கு அரசியல் அமைப்பு சட்டங்கள் பற்றியும், மாணவர்களுக்கான அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தகவல்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி.நாதன்வேல் தலைமை தாங்கினார். கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ.கேசவராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பங்கேற்று, பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் மற்றும் கற்றல் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி நூலகதற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக அரசியல் சாசன முகப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலர் முகமது ஜியா வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் பள்ளி ஆசிரியர் செந்தமிழ் நன்றி கூறினார்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?