இந்தூர் மருத்துவமனையில் 2 பச்சிளம் குழந்தைகளை கடித்துக் குதறிய எலிகள்

இந்தூர் மருத்துவமனையில் 2 பச்சிளம் குழந்தைகளை கடித்துக் குதறிய எலிகள்

இந்தூர்:

மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூர் நகரில் மிக​வும் பிரபல​மான மகா​ராஜா யஷ்வந்த் ராவ் மருத்​து​வ​மனை செயல்​பட்டு வருகிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்ள என்​ஐசியூ எனப்​படும் நியூநேட்​டல் இன்​டென்​சிவ் கேர் யூனிட்​டில்​(பச்​சிளம் குழந்​தைகள் தீவிர சிகிச்​சைப் பிரிவு) பச்​சிளம் குழந்​தைகள் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்​தன.


இந்​நிலை​யில் இந்​தப் பிரி​வில் இருந்த 2 பச்​சிளம் குழந்​தைகளை, எலிகள் கடித்​துக் குதறி​யுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இந்த மருத்​து​வ​மனை​தான் மத்​திய பிரதேச மாநிலத்​திலேயே மிகப்​பெரிய மருத்​து​வ​மனை என்று பெயர் பெற்​ற​தாகும்.


அந்த சிறப்பு வாய்ந்த மருத்து​வ​மனை​யின் என்​ஐசியூ பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த குழந்​தைகளை எலிகள் கடித்​துள்​ளது மிக​வும் பரபரப்​பான செய்தியாக பார்க்​கப்​படு​கிறது. இதைத் தொடர்ந்து அந்​தக் குழந்​தைகள் வேறு வார்​டுக்கு மாற்​றப்​பட்டு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.


இதுகுறித்து மருத்​து​வ​மனை சூப்​பிரடெண்ட் டாக்​டர் அசோக் யாதவ் கூறும்​போது, “இந்த சம்​பவம் எனக்​குத் தெரிய​வந்​ததும், குழந்தைகளை வேறு வார்​டுக்கு மாற்றி சிகிச்சை அளிக்க உத்​தர​விட்​டேன். மருத்​து​வ​மனை​யில் எழுந்​துள்ள எலி பிரச்​சினையை உடனடி​யாக சீர் செய்ய உத்​தர​விட்​டுள்​ளேன்” என்​றார்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%