இந்தோனேசியாவில் பள்ளி மசூதியில் குண்டுவெடிப்பு: மாணவர்கள் உள்பட 55 பேர் காயம்

இந்தோனேசியாவில் பள்ளி மசூதியில் குண்டுவெடிப்பு: மாணவர்கள் உள்பட 55 பேர் காயம்



இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியிலும், வெளியிலும் 2 குண்டுகள் வெடித்தன.

ஜகார்த்தா,


இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவின் வடக்கு பகுதியில் உள்ளது கெலாபா காடிங் குடியிருப்பு. இங்குள்ள கடற்படை வளாகத்தில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியும், அதனுடன் இணைந்த மசூதியும் உள்ளது.


நேற்று இந்த மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியிலும், வெளியிலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக மாறியது. மாணவர்களும், மற்றவர்களும் பீதியில் ஓடினர். இந்த குண்டுவெடிப்புகளில் 55 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். அவர்களின் உடல்களில் கண்ணாடித்துண்டுகள் துளைத்தது மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டு இருந்தன.


தகவல் அறிந்து மாணவர்களின் பெற்றோர், பள்ளி பகுதியிலும், மருத்துவமனை வளாத்திலும் கூடினர். இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்று எந்த தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


இதற்கிடையே சமூக வலைத்தளங்களில், பள்ளி மாணவர்கள் பதற்றத்துடன் மைதானத்தின் குறுக்கே பீதியுடன் காதைப் பொத்திக் கொண்டு ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%