இந்​திய அணிக்​காக விளை​யாடிய பாகிஸ்​தான் கபடி வீரருக்கு தடை

இந்​திய அணிக்​காக விளை​யாடிய பாகிஸ்​தான் கபடி வீரருக்கு தடை


 

இஸ்​லா​மா​பாத்: இந்​தி​​யா​வைச் சேர்ந்த ஓர் அணிக்​காக கபடிப் போட்​டி​யில் விளை​யாடிய பாகிஸ்​தான் கபடி வீரருக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.


பாகிஸ்​தானைச் சேர்ந்​தவர் உபைதுல்லா ராஜ்புத். கபடி வீர​ரான இவர் பஹ்ரைனில் அண்​மை​யில் நடை​பெற்ற தனி​யார் விளை​யாட்​டுப் போட்​டி​யில் இந்​தி​யா​வை சேர்ந்த ஓர் அணிக்​காக விளை​யாடி​னார். இந்​தப் போட்​டி​யின் ​போது இந்​திய அணி​யின் பனியனை உபைதுல்லா ராஜ்புத் அணிந்​திருந்​தார். இந்​நிலை​யில் உபைதுல்லா ராஜ்புத்​துக்கு கால​வரையற்ற தடையை பாகிஸ்​தான் கபடி சம்​மேளனம்​ (பிகேஎப்) விதித்​துள்​ளது.


நேற்று முன்​தினம் நடை​பெற்ற பாகிஸ்​தான் கபடி சம்​மேளன கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது. வெளி​நாட்டு அணிக்​காக விளை​யாடு​வதற்​காக பாகிஸ்​தான் கபடி சம்​மேளனத்​தின் தடை​யில்​லா சான்​றிதழை உபைதுல்லா பெற​வில்​லை. எனவே அவருக்கு கால​வரையற்ற தடை விதிக்​கப்​படு​கிறது என்று சம்​மேளனம் அறி​வித்​துள்​ளது. இந்​நிலை​யில் உபைதுல்லா ராஜ்புத்​துக்கு விதிக்​கப்​பட்​டுள்ள தடையை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்ய​லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%