கும்மியடித்தே.. குலவைகளிட்டே..
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி.!
நம்மைப் பிடித்த..
துன்பங்கள் போயின..
தைப் பிறந்ததெனக் கும்மியடி.!
எங்களினம் தமிழ்ப் பொங்கு மினமென..
இங்கு வந்துப் பெண்கள் கும்மியடி!
சங்கத் தமிழ்த் தந்த மன்றத்திலே இன்று.. எங்கும் முழங்கிடக்
கும்மியடி.!
தூங்கிக் கிடப்பதோ.?
ஏங்கித் தவிப்பதோ..?
துள்ளி வந்தோமெனக்
கும்மியடி.!
தேங்கிக் கிடக்கிற..
நீர்நிலை அல்லவே..
கொட்டும் அருவி நாம்
கும்மியடி.!
ஆண்ட இனம் இன்று..
அடிமைப் படுவதோ..?
ஆர்த் தெழுந்தோமென்று
கும்மியடி.!
இந்தப் பொங்கலிலே..
ஒன்று பட்டோமென்று
இனவெழுச்சிப் பொங்கக் கும்மியடி.!
கட்டு கரையில்லை..
கொட்டும் மழையென..
ஒட்டிவந்தே நின்றுக் கும்மியடி.!
எட்டி நட இன்றே..
எங்கள் தமிழினம்..
எங்கள் தமிழினம்.. என்றுப் பெருமிதக் கும்மியடி.!
முட்டுகின்ற காளை..
வாடி வாசல் மீறி.. பாய்ந்து வந்ததென்றுக் கும்மியடி!
ஒற்றுமையாய் நின்று.. எங்கள் தமிழ்க்கொடி.. பட்டொளி வீசிடக் கும்மியடி.!
வே.கல்யாண்குமார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?