வீரம் என்பது
பயப்படாத மாதிரி
நடிக்கிறது;
புத்திசாலி என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது;
சந்தோஷம் என்பது
பணம் இருப்பதாய்
காட்டிக் கொள்வது;
அமைதி என்பது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;
குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்போது
தெரிவது;
தன்னிலை விளக்கம் என்பது
தன் தவறுக்கு சால்ஜாப்பு
சொல்வது;
பொதுசனம் என்பது
கூடி நின்று வேடிக்கை
பார்ப்பது;
தானம் என்பது
வீட்டில் உள்ள பழையதை
கொடுப்பது;
பணிவு என்பது
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;
காதல் என்பது
இரண்டு பேரும் சேர்ந்து
பொய் சொல்வது;
கல்வி என்பது
காப்பி பேஸ்ட் செய்வது;
நேர்மை என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;
நல்லவன் என்பது
கஷ்டப்பட்டு நடிப்பது;
எதார்த்தம் என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக் கொள்வது;
மனிதம் என்பது
இன்னமும் கண்டு
பிடிக்க முடியாதது;
சிரிப்பு என்பது
அடுத்தவன் விழும்போது
வருவது;

*🌹✍️முத்து ஆனந்த்
வேலூர் - 632 002*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?