இராமநாதபுரத்தில் ஓய்வூதியர் தின விழா

இராமநாதபுரத்தில் ஓய்வூதியர் தின விழா

 இராமநாதபுரத்தில் ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ஓய்வூதியர் தின விழா மாவட்டத் தலைவர் எஸ். முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் த.இராமச்சந்திரபாபு வரவேற்பு ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.எஸ்.விஜய ராகவன் துவக்க உரையாற்றினார். இராமநாதபுரம் கூடுதல் கருவூல அலுவலர் ரோ.காதர் மொய்தீன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஹ.அப்துல் நாஜுமுதீன், ரெப்கோ வங்கி முதன்மை மேலாளர் ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். டி.என்.ஜி.பி.ஏ மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சங்கரி நிறைவு ரையாற்றினார். சிவனுபூவன் நன்றி கூறினார். இதில் ஜி.கிருஷ்ணன், எம்.மாலா, கே.பிச்சை, எம்.மாரிமுத்து, எம்.அய்யாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%