இறைவன் அருள்

இறைவன் அருள்

மூன்று நாட்களுக்கும் மேலாக மழை பெய்து கொண்டிருந்தது.

மழை நீர் தெருவெல்லாம் ஆறாகஓடி கொண் டிருக்கிறது


வீடு வாசல் என்று வசதியாக வாழ்ந்து கொண்டிருப் பவர்களே விழி பிதுங்கிப் போயிருக்கும் போது, இந்த ஏழை யாசகன் எம்மாத்திரம். இரந்துண்டு உயிர் வாழும் இழி நிலையில் இருக்கும் இந்த யாசகன் , இந்தத் தொடர் மழை காரணமாக 

நான்கைந்து நாட்களாக சரியான உணவு கிடைக்காமல் பசியால் வாடிக்கொண்டிருந்தான்.        


ஊர் எல்லையிலுள் ள அம்மன் கோயிலில் செல்வந்தர் ஒருவர் அன்னதானம் வழங்குகிறார் என்று இருவர் பேசிகிட்டு கொண்ட செய்தி அவன் நெஞ்சில் தேனாய் இனித்தது.

மழையையும் பொருட் படுத்தாமல் அம்மன் கோயிலை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினான்.


செல்வந்தர் ஒருவர், தம் கைகளாலேயே, வருகிற வர்களுக்கு எல்லாம், அறுசுவை உணவுகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


யாசகனும் தன் கையிலிருந்த தட்டை நீட்டியவாறே தயங்கித் தயங்கி செல்வந்தர் அருகில் போய் நின்றான்.


உணவுப் பதார்த்தங்களை அள்ளிய செல்வந்தர் யாசகனைப் பார்த்தார். உணவு வகைகளை அவன் தட்டிலே போடாமல், சற்றுத் தயக்கம் காட்டினார்.


"பெரியவரே நீங்களோ மிகவும் பசியோடு வந்துள்ளீர்கள்.

நானும் உணவு வழங்க ஆர்வமாய்தான் இருக்கிறேன். ஆனால் உங்கள் பாத்திரத்தைப் பாருங்கள் மிகவும் அழுக்காக, நெடுநாட்களாக சுத்தம் செய்யாமல், அப்படியே அசுத்தமாக இருக்கிறது . அசுத்தமான பாத்திரத்தில் அன்னம் படைத்தால் அந்த அன்னமும் வீணாகிப் போய் விடும் இல்லையா.பாத்திரத்தை, நன்றாகக் கழுவிக் கொண்டு வாருங்கள் என்றார்.

 

இறைவனிடம் நாம் இறைஞ்சிக் கேட்கும் அருள் களை எல்லாம், அவர் நமக்கு வழங்கத் தவறுவதே இல்லை. ஆனால் அந்த அருளைப் பெற்றுக்கொள்ள நம் மனம் என்னும் பாத்திரம் சுத்தமாக இருக்க

வேண்டுமே !! 

===============

குடந்தை பரிபூரணன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%