ஈரோட்டில் 70 வயது பூர்த்தியடைந்த 25 மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்து சீர்வரிசை அமைச்சர் முத்துசாமி வழங்கி வாழ்த்து
Nov 19 2025
18
ஈரோடு மாநகராட்சி, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் தகோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 70 வயதிற்கு மேற்பட்ட 25 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்து சீர்வரிசை பொருட்களை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தெரிவித்ததாவது:–
முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் அனைத்து தரப்பினருக்கும் எல்லா திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
சீர்வரிசையுடன் சிறப்பு
அந்த வகையில் தற்போது, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், ஈரோடு இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள கோயில்களின் சார்பில் 70 வயது பூர்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு உள்ள 25 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்கின்ற நிகழ்வு, மிக எழுச்சியாக நடைபெறும் திருமணம் எவ்வாறு நிகழுமோ அந்த அளவிற்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எல்லோரையும் மதிக்க வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. முதலமைச்சர் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக முதியோர் மனமகிழ் வள மையம் "அன்புச்சோலை" திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
மிகப்பெரிய முருகன் சிலை
மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திண்டல் வேலாயுதசாமி கோவிலில் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் 25 மூத்த தம்பதியினருக்கு வேட்டி, சட்டை, புடவை, 2 மாலைகள், வெற்றிலை, பாக்கு, 1 முழம் பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பழவகைகள், எவர் சில்வர் தட்டு, 1 டசன் கண்ணாடி வளையல், பாக்கெட் சைஸ் சுவாமி படம் உள்ளிட்ட பொருட்களை அடங்கிய தொகுப்பு வழங்கி சிறப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கந்தசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சுகுமார், அறங்காவலர் குழுத் தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?