
திரளான பக்தர்கள் பங்கேற்பு.
செய்யாறு ஜூலை .18,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயில் நேற்று முன்தினம் மாலை மகா ஆரத்தி தரிசன நிகழ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு அடுத்த காஞ்சிபுரம்- வந்தவாசி நெடுஞ்சாலையில் கூழமந்தல் அடுத்து உக்கல் கிராமம் உள்ளது.
இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் எழுந்தருளி உள்ளது. நேற்று முன்தினம் மாலை கோயிலில் யாகசாலை வேள்வி பூஜையினை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. பின்னர் புனித நீரால் மூலவரான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?