உன் மடியில்

உன் மடியில்



மாயக்காரா... 

நீ

என் இடையை தானே 

கிள்ளினாய்

பிறகு எப்படி 

சிவந்தது 

என் கன்னம்? 

மந்திரக்காரா...

என்னதான் 

மை கொண்டு 

மந்திரம் போட்டாலும் 

மாட்ட மாட்டேன் 

ஒரு நாளும் 

உன்னிடம்!

தந்திரக்காரா... 

உன்னை விட்டு 

மிஞ்சிப் போகிறேன் 

நீ கெஞ்சி கொஞ்சி 

வருகிறாயே 

ஒரு 

குழந்தையைப் போல!

வசியக்காரா... 

என்ன வசியம் 

செய்தாயோ 

நீ விரித்த வலையில் 

விழுந்துவிட்டேனே 

இப்படி 

உன் மடியில்!



பாரதி முத்து

ஓட்டேரி வேலூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%