உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்: வேலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்
Nov 28 2025
20
வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகளின் சார்பில் குடியாத்ததில் உள்ள கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து, வேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள 6 கல்லூரிகளை சார்ந்த 126 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கான கல்விக் கடன் உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பங்களை வழங்கினார்கள். இம்முகாமில் கலந்து கொண்ட 90 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 கோடியே 51 இலட்சம் மதிப்பிலான வங்கி கடன் உதவிக்கான (கல்வி கடன்) ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு கல்வி கடன் தேவைப்படும்போது அவர்களுக்கு கல்வி கடன் வழங்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு இலக்கு நிர்ணயித்து கல்வி கடன் முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தாலுக்காவிலும் கல்வி கடன் முகாமை சம்மந்தப்பட்ட வங்கிகளை வரவழைத்து நடத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வங்கி கடனுதவிக்கான ஆணைகள் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் 4வது சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 57 கோடி வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியையும் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் உயர்கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் ரூபாய் ஆயிரமும், தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரமும் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற கல்வி கடன்முகாம்களில்மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?