உலகக் கோப்பையை வென்ற ரிச்சா கோஷ்க்கு ரூ.34 லட்சம், துணை போலீஸ் சூப்பிரண்டு பதவி
கொல்கத்தா, நவ.9-
13-வது பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 2-ந் தேதி நவிமும்பையில் நடந்த இறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல்முறையாக கோப்பையை வசப்படுத்தியது. அந்த அணியில் இடம் பிடித்து இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரிச்சா கோஷ் 235 ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இதில் இறுதிப்போட்டியில் அடித்த 34 ரன்னும் அடங்கும்.
உலகக் கோப்பையை வென்ற முதல் பெங்கால் வீராங்கனையான ரிச்சா கோஷ்க்கு பாராட்டு விழா கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. பெங்கால் கிரிக்கெட் சங்கம் மற்றும் மேற்கு வங்காள அரசு சார்பில் நடந்த இந்த பாராட்டு விழாவில் அரசு சார்பில் ரிச்சா கோஷ்க்கு ரூ.34 லட்சம் (இறுதிப் போட்டியில் அடித்த ஒரு ரன்னுக்கு ரூ.1 லட்சம் வீதம்) மற்றும் தங்க சங்கிலி பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் அவருக்கு பங்கா பூஷண் என்ற உயரிய விருதும், துணை போலீஸ் சூப்பிரண்டு பணிக்கான அரசாணையும் வழங்கப்பட்டது. இதனை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வழங்கி பாராட்டினார். பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் தங்க மூலாம் பூசப்பட்ட கிரிக்கெட் பேட் மற்றும் பந்து பரிசாக அளிக்கப்பட்டது.
இந்த விழாவில் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி, இந்தியபெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?