உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Nov 21 2025
28
தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
புதுடெல்லி,
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இரண்டு முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கானிவா குல்செவாரை பதம் பார்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் அவருக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
20 மாதங்களுக்கு பிறகு பதக்கம் வெல்ல இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நிகாத் ஜரீன் கூறினார். ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), ஜதுமணி சிங் (50 கிலோ), பவான் பார்த்வால் (55 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ) ஆகியோரும் இறுதிப்போட்டியை எட்டினர். இன்றைய தினம் மொத்தம் 15 இந்தியர்கள் தங்கப் பதக்கத்துக்காக கோதாவில் குதிக்கிறார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?