உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு திசையன்விளை மனோ கல்லூரி சார்பில் உவரி கடற்கரையில் தூய்மைப் பணி
Sep 20 2025
130
திசையன்விளை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று சர்வதேச கடற்கரை தூய்மை தினம் (International Coastal Cleanup Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர் முனைவர் D.லில்லி அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணி திட்டம் (NSS) சார்பாக உவரி கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் நடைபெற்ற இந்த தூய்மை பணியில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் பலவேச கிருஷ்ணன், வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் சண்முகம், அலுவலகப் பணியாளர் திருமதி கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று, கடற்கரையில் தேங்கியிருந்த மக்காத பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு கழிவுகளை சேகரித்தனர்.
சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் மற்றும் பிறக் கழிவுகள் அகற்றப்பட்டு, ஊராட்சி கழிவு மேலாண்மை தொட்டியில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வு கடற்கரையின் சுத்தத்தையும், சமூகப் பொறுப்புணர்வையும் வலியுறுத்தும் வகையில் அமைந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?