உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9ஆவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே) - இந்தியாவின் முன்னணி வீரர் அர்ஜுன் எரிகைசி மோதினர். இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்றது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இரு வீரர் களுக்கும் மிகக் குறைந்த கால அளவே இருந்தது. இந்த பதற்றமான சூழலில், கார்ல்சன் தனது ராணி காயை நகர்த்தும் போது தவறுதலாகக் கீழே நழுவவிட்டார். அது சற்றுத் தள்ளி கீழே விழுந்தது. நிலைதடுமாறிய கார்ல்சன், குறித்த நேரத்திற்குள் காய்களை நகர்த்த முடியாமல் நேர நெருக்கடியால் தோல்வியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், செஸ் மேஜையை பலமாக ஓங்கி அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 3ஆவது முறை கார்ல்சன் இவ்வாறு விதிமீறலில் ஈடுபடுவது முதல்முறையல்ல. இந்தாண்டு நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் குகேஷுக்கு எதிரான கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்சன் தோல்வியடைந்த போது மேஜையைத் தட்டியும், ஆத்திரத்துடன் மேடையை விட்டு வெளியேறியும் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். மேலும் ரஷ்ய வீரர் விளாடிஸ்லாவ் ஆர்டெமிவிடம் தோற்றபோது, கார்ல்சன் தனது கோட்டை (Blazer) வேகமாக இழுத்துக்கொண்டு, அருகில் வந்த கேமராவைத் தள்ளிவிட்டுச் சென்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?