உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் சிப்காட்டில் புதிதாக காலணி தொழிற்சாலை - மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் பழனிராஜு ஆய்வு
உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் சிப்காட்டில் புதிதாக காலணி தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலைக்கு உயிர் அழுத்த மின் இணைப்பு வழங்குவதற்காக தொழிற்சாலை வளாகத்தை திருவண்ணாமலை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் பழனிராஜு ஆய்வு செய்தார் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமையவிருக்கும் இடங்களை பார்வையிட்டு விரைவாக மின் இணைப்பு வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாரதி செயற்பொறியாளர்கள் மயில்வாகனன் கணேசன் உளுந்தூர்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவராமன் அய்யம் பெருமாள் உதவி செயற்பொறியாளர்கள் விஜய் சுதா ஆசனூர் இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?