கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக எடப்பாடி கே. பழனிசாமியின் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அதிமுக தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்புடைய வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு அனுமதி வழங்க தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இவற்றை கவனத்திற்கொண்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் நிலையில், நாமக்கலில் திட்டமிட்டிருந்த பிரசாரம் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாமக்கல் சுற்றுப்பயணம் அக். 5,6 தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அப்பயணம் அக். 8-ஆம் தேதியில் நடைபெறும் என அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ல அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?