அரசியல் பரபரப்புக்கிடையே எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான திமுக, அதி.முக, ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்க தயாராகி வருகின்றன. தற்போது ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்று உள்ளன. இந்த இரு கூட்டணியிலும் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியை பலப்படுத்தும் வகையிலும், விரிவுபடுத்தும் வகையிலும் பல்வேறு ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார். சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்துள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், இது அரசியல் ரீதியிலான சந்திப்பு தான். 170க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு சென்று மக்களின் எண்ண ஓட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிந்து வந்துள்ளார். எனவே எங்களின் கூட்டணி வலிமை பற்றி கலந்துரையாடினோம்.
தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அண்ணா தி.மு.க. இந்த கட்சி உடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அண்ணா தி.மு.க – பா.ஜ.க மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்தால் பீகாரை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் பரபரப்புக்கிடையே எடப்பாடி பழனிசாமி – ஜி.கே.வாசன் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?