ஐந்தாம் வகுப்பு படிக்கும் தன் மகள் மீனுவின் பட்டு கன்னத்தில் முத்த மழை பொழிந்து தன் இருசக்கர வாகனத்தில் இருந்து இறக்கி விட்டான் சரத் !
"டாடி... இனி நீங்க எப்ப வருவீங்க ..!"
ஏக்கமாய் கேட்டது அந்த பிஞ்சு நெஞ்சம் !
"நான் ... நான் இனி ஐந்து நாள் கழிந்து தான்டா வருவேன் இன்னைக்கு ஈவினிங் உன் அம்மா வந்து கூட்டிட்டு போவா...அம்மா கூட போக உனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே... !"
சரத்தின் கேள்வி... மீனுவை ஏதோ ஒரு திசையில் வெறித்துப் பார்க்க வைத்தது... அந்த பிஞ்சு நெஞ்சம் கண்களில் நீர் கோடு வார்த்தது....
"எப்பப்பா... அம்மாவும் நீங்களும் ஒண்ணா வந்து என்னை கூட்டிட்டு போவீங்க... !"
"அது இனி நடக்கும்னு தெரியல டா ...நீ நல்லா படிக்கணும் உனக்காக என்ன வேணா பண்ண தயாரா இருக்கேன் உனக்காக என் உயிரை கூட கொடுப்பேன் செல்லம் ..!"
தன் மகள் மீனுவை மீண்டும் கட்டி அணைத்தான் சரத் !
"அப்பா .. ப்ளீஸ் எனக்காக உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம் பா. எனக்காக அம்மாவோட கோபத்தை எல்லாம் மறந்து, நம்ம மூணு பேரும் சந்தோஷமா வாழனும்...அது மட்டும் செய்யுங்கப்பா... !"
தன் மகள் நியாயமான கேள்வியில் மனம் தளர்ந்து சிந்திக்க ஆரம்பித்தான் சரத் .

எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?