என் ஊர் பேருந்து

என் ஊர் பேருந்து

என் ஊர் பேருந்து


நொடிக்கு ஒன்று


வந்தும் -ஏற


வரவில்லை மனம் .


கூண்டு கிளியாய்


துடிக்கும்


கடிகாரத்தை போல்


உந்தன் பின்னலில்


பின்னால்


லயித்து கிடக்கிறது மனம் .


மணிக்கணக்கில்


ஒத்தை மரமாய்


நின்று தவிக்கிறேனடி


உன்னை


எந்தன் அத்தை மகளாக்க !


லேட்டா வரணும்ன்னு


வேண்டிகிட்ட இருக்கும் போதே


வேகமா வந்து தொலைந்தது


உன் ஊர் மினி பஸ்.


கண் கடக்கும் தூரம் வரை


ஏக்கமாய்


சாலைகளை பார்த்து தொலைத்தது


மனம் .


காலங்கள் கடந்தது


காதலும் தொலைந்தது .


கடல் கடந்து உழைத்து


ஊர் திரும்பினாலும்


உறவு கூடி


திருமணம் நடத்தி வைத்தாலும்


உன் பெயரும் ,நினைவுகளும்


ஊசலாடும் உயிருக்குள்.


நம்பர் பிளேட் இல்லாத


உன் காதலின்


 மினி பஸ் பயணத்திலிருந்து


யார் என்னை மீட்டெடுப்பது !


-லி .நௌஷாத் கான் -

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%