எம்எல்ஏக்களுக்கு ஜிஎஸ்டி சலுகை: முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி
Oct 16 2025
48
சென்னை: எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஜிஎஸ்டி கட்டண சலுகையுடன் தலா 3 கோடி ரூபாய் வீதம், 702 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி நிதியில் 54 லட்சம் ரூபாயை ஜிஎஸ்டி யாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் எம்எல்ஏக்கள் ஜிஎஸ்டி விலக்கு கோரிய போது, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசே இந்த தொகையை ஏற்கும் என்று அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் 3 கோடி ரூபாய்க்கு முழுமையாக தொகுதி மேம்பாட்டு பணிகளை மேற்கொண்ட பின், 54 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி கட்ட ணத்தை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளி யிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?