
சென்னை:
எம்சிசி - முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 4-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. இந்தியன் ரயில்வே அணி தரப்பில் குர்சாகிப்ஜித் சிங் (18-வது நிமிடம்), தர்ஷன் கவ்கர் (53-வது நிமிடம்), ஷேஷ கவுடா (56-வது நிமிடம்), சண்முகம் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 1-0 என்ற கோல் கணக்கில் சாய் என் சிஓஇ (போபால் ) அணியை வீழ்த்தியது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%